இவ்வார இறைவார்த்தை (260906-260913)

260906 ஞாயிறு: ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு-வா1: எசேக்கியேல் 33:7-9 | திருப்பாடல் 95:1-2, 6-7, 8-9 | வா2: உரோமையர் 13:8-10 | ந: மத்தேயு 18:15-20.

இயேசு: உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.

260907 திங்கள்: [தூய பீட்டர் கிளாவர்]-வா1: 1 கொரிந்தியர் 5:1-8 | திருப்பாடல் 5:4-5அ, 5ஆ-6, 11 | ந: லூக்கா 6:6-11.

இயேசு: "உமது கையை நீட்டும்!" என்று வலக்கை சூம்பியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.

260906 செவ்வாய்: தூய கன்னி மரியாவின் திருப் பிறப்பு (ஆரோக்கிய அன்னை)-வா1: மீக்கா 5:2-5அ (அல்லது) உரோமையர் 8:28-30 | திருப்பாடல் 13:5, 6 | ந: மத்தேயு 1:1-16, 18-23.

இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்..இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

260909 அறிவன்: [தூய பீட்டர் கிளாவர்]-வா1: 1 கொரிந்தியர் 7:25-31 | திருப்பாடல் 45:10-11, 13-14, 15-16 | ந: லூக்கா 6:20-26.

இயேசு: இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

260910 வியாழன்: [தூய ஃபினியன்]-வா1: 1 கொரிந்தியர் 8:1ஆ-7,11-13 | திருப்பாடல் 139:1-3, 13-14, 23-24 | ந: லூக்கா 6:27-38.

இயேசு: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

260911 வெள்ளி: [தூய ஜீன் காபிரியேல்]-வா1: 1 கொரிந்தியர் 9:16-19, 22-27 | திருப்பாடல் 84:2-3, 4-5, 11 | ந: லூக்கா 6:39-42.

இயேசு: முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

260912 காரி: [மரியாவின் திருப்பெயர்]-வா1: 1 கொரிந்தியர் 10:14-22 | திருப்பாடல் 116:12-13, 17-18 | ந: லூக்கா 6:43-49.

இயேசு: நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்..

260913 ஞாயிறு: ஆண்டின் பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு-வா1: சீராக்கின் ஞானம் 27:30-28:7 | திருப்பாடல் 103:1-2, 3-4, 9-10, 11-12 | வா2: உரோமையர் 14:7-9 | ந: மத்தேயு 18:21-35.

பேதுரு: ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?

இயேசு: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை.

புதிதாய்.. இனிதாய்..!

அன்புக் கடவுள் அருளிய செய்தி

Read more

இவ்வார அருள்வாக்கு: மன்னிப்பு தருவோம்..மன்னிப்பு பெறுவோம்..!

இயேசு: உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்..

மத்தேயு 18:35